திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.1020 கோடி ஊழல் நடைபெற்றதாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவரது சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் என 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறையின் 258-பக்க அறிக்கை மற்றும் தகவல்கள் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், நேருவின் உதவியாளர்
கவி பிரசாத்தின் மொபைல் போனில் இருந்து கைப்பற்றப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் படங்களின் மூலம், டெண்டர் முடிவுகள் திறக்கப்படுவதற்கு முன்பே குறிப்பிட்ட காண்ட்ராக்டர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக கூட்டுச்சதி, நம்பிக்கை மோசடி, ஊழல் உள்ளிட்ட 14 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கபட்டுள்ளது.

